தளத்தின் நோக்கம்

இன்று மிக வேகமாக உலகம் மாற்றம் அடைந்து வருகிறது. நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும்  அறிவியலின் துணை கொண்டு தான் செயல்படுகிறது. ஆனாலும் நம் பள்ளிகளில் இன்றும் அறிவியல் முக்கால்வாசி மதிப்பெண் பெறும் அளவில் தான் மதிக்கப்படுகிறது. அறிவியல் மாற்றங்களை தனக்கு, தன் கருத்துக்கு ஏற்றவாறு ஜோடிக்கவும், அதை கொண்டு மக்களை ஏமாற்றுவதும் இன்று பரவலாக நடைபெறுகிறது. இது பிரமிட் திட்ட ஆள் சேர்ப்பு, ஈமு பண்ணை தொடங்கி , இணையத்தில் வரும் மின்னஞ்சல் , ATM நிலையம் தொட்டு தடுப்பூசி, நம்பிக்கை சிகிச்சைகள், அற்புதங்கள் என எங்கும் இருக்கிறது. இதை விட எல்லாம் மிகவும் கவலை தரும் விதமாக பல நூற்றாண்டாக அறிவியல் செய்த முன்னேற்றத்தை இன்று ஏதோ மேற்குலக அரசும், நிறுவனங்களும் செய்யும் கூட்டு சதி என்னும் அளவில் மக்கள் நம்பும் அளவுக்கு நிலைமை வந்து விட்டது. மக்கள் விஞ்ஞானி, விஞ்ஞானம் ஆகியவற்றை விட ஏதோ ஒன்று அல்லது ஒரு சிலர் கூறுவதை நம்பும் அளவுக்கு நம் அறிவியல் சிந்தனை மங்கி விட்டது.

இதை எல்லாம் முறியடித்து அறிவியல் சிந்தனை, அறிவியல் புரிதல் ஆகியவற்றை மக்களிடம் சேர்பதன் ஒரு ஆரம்ப முயற்சியே இந்த தளம். தங்கள் விஞ்ஞான பார்வையை விரிவடைய செய்வதும், உங்கள் தினசரி வாழ்வில் விஞ்ஞான புரிதலை புகுத்துவதும் தான் இந்த தளத்தின் நோக்கம்.

Advertisements