அறிவியல் கல்வியறிவு

அறிவியல் கல்வியறிவு. ஆங்கிலத்தில் Scientific Literacy. இன்றைய வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் என மக்கள், கல்வியாளர் முதல் விஞ்ஞானிகள் வரை அனைவரும் ஒத்துகொள்ளும் விஷயம். சரி அறிவியல் கல்வியறிவு என்றால் என்ன? பள்ளி, கல்லூரியில் அறிவியலை படித்து, சிறந்த மதிப்பெண் பெறுவதா? இயற்பியலில் 200/200 வாங்கும் மாணவனுக்கு அறிவியல் கல்வியறிவு இருப்பதாக கண்டிப்பாக கூறலாமா? இல்லை தனிம வரிசை அட்டவணை (Periodic Table) முழுவதும் மனப்பாடமாக ஒருவருக்கு தெரியும் என்றால் அவருக்கு அறிவியல் கல்வியறிவு இருப்பதாக கொள்ளலாமா? இவர்கள் இருவர் திறமைக்கும், அறிவியல் கல்வியறிவு இல்லை என்பதே பதில்.

அப்போ எது தான் அறிவியல் கல்வியறிவு? யாருக்கு அது இருப்பதாக ஒத்து கொள்ளலாம்? மிக எளிமையாக கூற வேண்டுமானால், தனிமனித, சமூக, கலாசார, பொருளாதார விசயங்களில் முடிவெடுக்க தேவையான அறிவியல் கருத்துகள், அறிவியல் செயல்முறைகள் பற்றிய அறிவு மற்றும் புரிந்துணர்வு ஒருவருக்கு இருந்தால் அவருக்கு அறிவியல் கல்வியறிவு உண்டு. அறிவியல் கல்வியறிவு உள்ள ஒருவர் தினசரி வாழ்கையில் நடக்கும் நிகழ்வை விவரிக்க, விளக்க மற்றும் அதன் விளைவுகளை கணிக்க கூடிய ஆற்றல் உடையவராக இருப்பார். இன்னும் சொல்ல போனால், சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள், அறிவியல் வழிமுறைகள், ஆராய்ச்சி முடிவுகள், அரசாங்க/ஆய்வக முடிவுகள், எதனால் ஒரு ஆய்வு அல்லது கண்டுபிடிப்பு அவசியம் போன்ற விசயங்களை பாரபட்சமற்ற முறையில் ஆராய்ந்து அறிய அறிவியல் கல்வியறிவு இன்றியமையாத ஒன்று.

இதை பார்த்தால், அறிவியல் கல்வியறிவு ஏதோ பெரிய, விளிம்பு அறிவியல் (Cutting Edge Science) புரிவதற்கு மட்டுமே வேண்டிய ஒன்று எனும் எண்ணம் எழலாம். தினசரி வாழ்வுக்கும் அது இன்றியமையாத ஒன்று. எவ்வாறு என்று பத்தி பத்தியாய் எழுதுவதை விட, ஒரு எடுத்துகாட்டு மிக எளிதாக விளக்கும். எடுத்துகாட்டாக, ஹைட்றிக் அமிலம் (Hydric Acid) எனும் ரசாயனத்தை எடுத்துகொள்வோம். இதற்க்கு ஹைட்ரோசிக் அமிலம்,  ஹைட்ரஜன் ஹைட்ராக்சைடு என பல பெயர்கள் உண்டு. இது ஒரு நிறமற்ற, வாசனையற்ற சேர்மம். இன்று இது நாம் மிக அதிகமாக பயன்படுத்தும் ரசாயனங்களில் ஒன்று. இதன் கெடுதல்களை மட்டும் பாருங்கள்:

1. புற்று நோய் முற்றிய நோயாளிகளின் உடலில் உள்ள புற்று நோய் கட்டிகளில் காணப்படும் ரசயானங்களில் இதுவும்  ஒன்று.
2. அமில மழையின் மிக முக்கிய கூறுகளில் ஒன்று.
3. புவி வெப்பமயமாதலில் (Greenhouse effect) முக்கிய பங்கு இதற்க்கு உண்டு.
4. நில அரிப்பின் முக்கிய காரணி.
5. வாயு வடிவில் இது நம் மீது பட்டால் தோலை பொசுக்கிவிடும்.
6. தற்செயலாக சுவாசத்தின் வழி உள்ளிழுத்தால், உயிர் போகும் அபாயம் உண்டு.

இவ்வளவு அபாயம் இருந்தாலும் இதை நாம் எங்கெல்லாம் பயன்படுத்துகிறோம் தெரியுமா?  தொழிற்சாலைகளில், மருத்துவ ஆராய்ச்சியில், துரித உணவகங்களில், பூச்சிமருந்து தெளிக்க, அணு உலைகளில், இவ்வளவு ஏன் நமக்கு காய்ச்சல் வந்தால் இதை தான் மருத்துவர்கள் முதலில் பரிந்துரைப்பர். அந்த அளவுக்கு நீக்கமற நிறைந்து விட்டது இந்த சேர்மம். அரசாங்க ஆதரவுடன் இதன் தயாரிப்பும், பயன்பாடும் கன ஜோராக உலகம் முழுவதும் நடந்து வருகிறது. இவ்வளவு ஏன், நாம் உண்ணும் உணவில் இருந்து எவ்வளவு முயன்றாலும் இதை நீக்க முடியவில்லை.

இந்த ரசாயனத்தை பற்றி இது வரை ஏன் நம்மிடம் எவரும் எதுவும் கூறவில்லை என்ற கேள்வி எழுகிறதா? இவ்வளவு ஆபத்தான இந்த சேர்மத்தை எவ்வாறு நாம் இன்னும் உபயோகிக்கலாம் என்னும் கேள்வி எழுகிறதா? அப்படியென்றால் வாருங்கள். இந்த தளத்தின் இலக்கு நீங்கள்  தான். ஏனென்றால் நான் மேலே பேசிய சேர்மம், நாம் அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீர். H2O என்பதன் ரசாயன பெயர்கள் தான் நான் மேலே குறிப்பிட்டவை. மேலே கூறிய ரியாக்சன் இல்லாமல் இதை பற்றி மேலும் அறிய ஆவல் கொண்டு தேட எத்தனித்த பலரில் ஒருவரா? அல்லது நான் எதை பற்றி பேசுகிறேன் என உடனே கண்டுபிடித்த பலரில் ஒருவரா நீங்கள்? உங்களுக்கு என் பாராட்டுகள். நீங்கள் சரியான வழியில் சென்று கொண்டு இருக்கீர்கள். உங்கள் பார்வையை, புரிதலை விசாலபடுத்தும் பல தளங்களில் ஒன்றாக இந்த தளத்தையும் கொள்வீர்கள் என நம்புகிறேன். 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s