அறிவியலும் பொதுஜனமும்

இன்றைய உலகில், இந்தியாவில் பிரச்சனைக்கு குறைவில்லை. தடுப்பூசி தொடங்கி மரபணு மாற்று பயிர்கள், பருவனிலை மாற்றம் தொட்டு கடவுள் வரை வாக்குவாதமும், குடுமிபிடி சண்டையும் குறைவில்லாமல் நடக்கிறது. சாமான்ய மனிதர் புரிதலின் வேகத்தை விட, விஞ்ஞானம் வேகமாக வளர்ந்து வருகிறது. எந்த தகவல் வேண்டுமானாலும் இணையத்தில் ஓரளவுக்கு சுலபமாக கிடக்கிறது. யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்னும் நிலையில், ஒருவரின் எழுத்தில் இருக்கும் நோக்கமோ, அவர்களின் பார்வை எப்படி அவர் எழுத்தை திரிக்கிறது என்பதோ மிக எளிதாக நம் … More அறிவியலும் பொதுஜனமும்

அறிவியல் கல்வியறிவு

அறிவியல் கல்வியறிவு. ஆங்கிலத்தில் Scientific Literacy. இன்றைய வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் என மக்கள், கல்வியாளர் முதல் விஞ்ஞானிகள் வரை அனைவரும் ஒத்துகொள்ளும் விஷயம். சரி அறிவியல் கல்வியறிவு என்றால் என்ன? பள்ளி, கல்லூரியில் அறிவியலை படித்து, சிறந்த மதிப்பெண் பெறுவதா? இயற்பியலில் 200/200 வாங்கும் மாணவனுக்கு அறிவியல் கல்வியறிவு இருப்பதாக கண்டிப்பாக கூறலாமா? இல்லை தனிம வரிசை அட்டவணை (Periodic Table) முழுவதும் மனப்பாடமாக ஒருவருக்கு தெரியும் என்றால் அவருக்கு அறிவியல் கல்வியறிவு இருப்பதாக கொள்ளலாமா? … More அறிவியல் கல்வியறிவு